» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தண்ணீர் குழாயிலிருந்து வெளிவரும் அசுத்த நீர் : ஆணையருக்கு எம்பவர் அமைப்பு மனு

சனி 27, ஜூன் 2020 7:55:46 PM (IST)

நாகர்கோவில் மணி மேடை அருகில் அசுத்தமாக  தண்ணீர் உள்ளது எனவும் அதை உடனே சரி செய்ய வேண்டுமென எம்பவர் அமைப்பு நாகர்கோவில் மாநகராட்சி ஆணையருக்கு மனு அனுப்பியுள்ளது.

இது குறித்து தூத்துக்குடி எம்பவர் அமைப்பு சார்பில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது, நாகர்கோவில் மணிமேடை அருகிலுள்ள தபால் நிலையத்திற்கும், ஹோட்டல் பிரபுவிற்கும் நடுவில் நாகர்கோவில் மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் குழாயிலிருந்து வெளிவரும் தண்ணீரால் அப்பகுதியே மிகவும் அசுத்தமாக காணப்படுகிறது.

இந்த அசுத்தமான தண்ணீர் நடைபாதையின் மீது வழிந்து செல்கிறது. இதனால் இந்த அசுத்தமான தண்ணீர் மீது நடந்து தான் பொதுமக்கள் அப்பகுதியை கடக்க வேண்டிய அவலமான சூழ்நிலை உள்ளது. ஆகவே இந்த இடத்தில் உள்ள தண்ணீர் வெளியே வராதவாறு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதோடு அப்பகுதியை சுத்தமாக பராமரிப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். என மனுவில் கூறப்பட்டுள்ளது.

 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory