» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்ற நடவடிக்கை : குமரி ஆட்சியர் அறிவிப்பு

சனி 27, ஜூன் 2020 5:52:17 PM (IST)

தொழிற்சாலைகள் இயக்குவது மூலம் சுற்றுச்சூழல் விதிமுறைகளை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென குமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி ஆட்சியர் பிரசாந்த்வடநேரே வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, தேசிய பசுமை தீர்பாயம் அசல் மனு எண். 593ஃ2017-ல், 21.05.2020 நாளிட்ட உத்தரவின் 18வது பத்தியின்படி, ஊரடங்கு நாட்களில் ஆற்று நீரின் தரம் மேம்பட்டுள்ளது என தெரிவித்ததோடு, அதற்கான காரணங்களை மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் பகுப்பாய்வு செய்து அதன் அறிக்கையினை தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டால், சுற்றுச்சூழல் தரநிலைகளை தொழிற்சாலைகள் முழுமையாகக் கடைப்பிடிக்க அதிகாரிகளால் உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

எனவே, பசுமை தீர்பாயம் அசல் மனு எண். 593-2017-ல் 21.05.2020 நாளிட்ட உத்தரவின்படி கன்னியாகுமரி மவாட்டத்தில் இயங்கும் அனைத்து தொழிற்சாலைகளும் சுற்றுச்சூழல் விதிமுறைகள் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory