» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மாநகராட்சி ஆணையர் பணி மாற்றத்திற்கு எதிர்ப்பு : தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

செவ்வாய் 23, ஜூன் 2020 7:36:45 PM (IST)

நாகர்கோவில் ஆணையர் சரவணகுமார் பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக சரவணகுமார் பணியாற்றி வந்தார். ஆனால் அவர் திடீரென மாற்றப்பட்டு ஆஷா அஜித் ஐஏஎஸ் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திடீரென தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். சமூக இடைவெளி பின்பற்றி அமர்ந்த அவர்கள் மாநகராட்சி ஆணையரை மாற்ற கூடாது என கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆணையரை மாற்ற கூடாது எனவும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory