» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா

வியாழன் 18, ஜூன் 2020 5:20:14 PM (IST)

குமரி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா  தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 175 ஆக உயர்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தினமும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. வெளிமாநிலம், வெளிநாடு, வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களால் தற்போது தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் நேற்று மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. இதில் விளவங்கோடு அருகில் உள்ள வெள்ளாங்கோடு பகுதியைச் சேர்ந்த 59 வயது ஆண், அவருடைய 57 வயது மனைவி மற்றும் 55 வயது பெண் ஆகியோர் வெளி மாவட்ட பகுதியில் இருந்து ரெயில் மூலம் நாகர்கோவிலுக்கு வந்தனர். இவர்கள் 3 பேருக்கும் சளி மாதிரிகளை சேகரித்து தனிமைப்படுத்தி வைத்திருந்தனர்.ஏற்கனவே கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பத்துகாணி பகுதியைச் சேர்ந்த வாலிபருடன் தொடர்பில் இருந்த 42 வயது பெண், 18 வயது வாலிபர், 16 வயது சிறுமி ஆகியோருக்கு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்து தனிமைப்படுத்தப்பட்டனர்.

வெளி மாவட்ட பகுதியில் இருந்து அதங்கோடு நடையாத்துவிளை பகுதியைச் சேர்ந்த 48 வயது ஆண், அவருடைய 45 வயது மனைவி ஆகியோருக்கு ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அண்டுகோடு பகுதியைச் சேர்ந்த 63 வயது பெண், வெண்டலிகோடு பகுதியைச் சேர்ந்த 55 வயது ஆண் ஆகியோருக்கு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். மொத்தம் 13 பேருக்கும் நேற்று கரோனா தொற்று இருப்பது பரிசோதனை முடிவில் தெரிய வந்தது.

இதனால் அவர்கள் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை கரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 175 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே நேற்று 2 பேர் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பினர். எனவே தற்போது 74 பேர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory