» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரிக்கு பேருந்தில் வந்தவருக்கு கரோனா உறுதி : உடன் வந்த பயணிகள் தனிமைப்படுத்தல்

வியாழன் 18, ஜூன் 2020 10:20:07 AM (IST)

கன்னியாகுமரிக்கு பேருந்தில் வந்தவருக்கு கரோனா பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து உடன் வந்த 35 பயணிகள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த ஒருவர், பேருந்து மூலம் குமரி மாவட்டத்திற்கு வந்தார். அவருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து அவருடன் பேருந்தில் பயணம் செய்த 35 பயணிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். 

வெளியிடங்களில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வருபவர்கள் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு இ-பாஸ்களின் உண்மை தன்மை குறித்து தீவிர சோதனை நடத்தப்படுகிறது. முறையான இ-பாஸ் இல்லாமல் மாவட்டத்திற்குள் வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. நேற்று முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித்திரிந்த 262 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் அபராதமாக ரூ.26 ஆயிரத்து 200 வசூலானது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory