» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் : குமரி ஆட்சியர் அழைப்பு

புதன் 17, ஜூன் 2020 4:40:34 PM (IST)

கல்பனா சாவ்லா விருதுக்கு  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து குமரி மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, கல்பனா சாவ்லா விருது ஆண்டு தோறும் சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளிலும் மிகப்பெரிய சாதனை புரியும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2020-ம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளையாட்டுத்துறையில் துணிச்சலான, தைரியமிக்க சாதனை புரிந்த பெண்கள் இவ்விருதுதினை பெற விண்ணப்பிக்கலாம்.

மேற்படி விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் உரிய சாதனை சான்றுகளுடன் விண்ணப்பங்களை 25.06.2020 மாலை 5.00 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அண்ணா விளையாட்டரங்கம், நாகர்கோவில், தொலைபேசி எண் : 04652 - 232060 என்ற  முகவரியில் சமர்ப்பிக்குமாறு,  கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory