» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பழமண்டியில் ரூ.17 லட்சம் கொள்ளையடித்த முதியவர் : டாஸ்மாக்கில் கையும் களவுமாக கைது

புதன் 3, ஜூன் 2020 5:26:38 PM (IST)


கன்னியாகுமரி மாவட்டத்தில் பழமண்டியில் ரூ.17 லட்சம் கொள்ளையடித்த முதியவர் டாஸ்மாக்கில் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு சூரங்குடி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் என்ற வரதராஜன்(42). இவர் நாகர்கோவில், நாகராஜா கோயில் குறுக்கு சாலையில் பழமண்டி வைத்துள்ளார்.கடந்த ஜூன்1ம் தேதி நள்ளிரவில் இந்த பழ மண்டியின் ஷட்டரை உடைத்து அலுவலக அறைக்குள் புகுந்த கொள்ளையன் மேஜை டிராயரில் இருந்த ரூ. 17 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றார். இந்த கொள்ளை சம்பவம் குறித்து சிவக்குமார் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் ஏஎஸ்பி ஜவஹர், இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.

சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது சுமார் 67 வயது மதிக்கத்தக்க ஒருவர் தலையில் பிளாஸ்டிக் கவரை சுற்றிக்கொண்டு முககவசம் அணிந்தவாறு உள்ளே நுழையும் காட்சிகள் இருந்தன. இதே நபர் கடந்த 2 நாட்களுக்கு முன் கடை வாசலில் நள்ளிரவில் படுத்திருந்த காட்சியும் பதிவாகி இருந்தது. யார்? என்பது பற்றிய விசாரணையில், அந்த நபர் கேரள மாநிலம் நெடுமங் காட்டை  சேர்ந்த முத்துச்சாமி என்ற கோபால்(67) என்பது தெரியவந்தது.
 
இவர் ஏற்கனவே நாகர்கோவிலில் ஜவுளிகடைகள், மளிகை கடைகளில் பூட்டை உடைத்து துணிமணிகள் மற்றும் பணத்தை திருடிய வழக்கில் சிக்கியவர் என்பதால் அவரை கண்டுபிடிக்க எஸ்.ஐ சம்சீர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சொந்த ஊர் நெடுமங்காடு என்றாலும் அடிக்கடி நாகர்கோவி லில்தான்  சுற்றித் திரிவார் என்பதும், குறிப்பாக மது அருந்திவிட்டு ஏதாவது டாஸ்மாக் கடைகள் முன் உறங்குவதும் வழக்கம் என்பதும் தெரியவந்தது. எனவே நாகர்கோவிலில் உள்ள டாஸ்மாக் கடைகள் முன் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் காலை 10 மணி அளவில் இருந்து தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

தனிப்படை போலீஸ் எதிர்பார்த்தபடியே நேற்று மதியம் நாகர்கோவிலில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் கையில் பையுடன் கோபால் மது வாங்க வந்தார். அவரை பார்த்ததும் போலீசார் அவரை  அழைத்து சென்று விசாரித்தனர்.விசாரணையில் பழ மண்டியில்  திருடிய  பணத்தை பேக்கில் கட்டுக் கட்டாக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து திருடிய பணம் ரூ.17 லட்சத்தை மீட்ட போலீசார் கோபாலை கைது செய்தனர்.  கொள்ளையடித்த பணத்தை சுமார் 8 மணி நேரத்தில் போலீசார் மீட்டு கொள்ளையனை கைது செய்தனர். இதையடுத்து தனிப்படை எஸ்ஐ.சம்சீர் மற்றும் போலீசாரை எஸ்.பி. ஸ்ரீநாத்,ஏஎஸ்பி ஜவஹர் ஆகியோர் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory