» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஆசாரிப்பள்ளம் அம்மா உணவகம் மூடப்பட்டது

ஞாயிறு 24, மே 2020 6:05:50 PM (IST)

ஆசாரிப்பள்ளம் அம்மா உணவகம் மூடப்பட்டதால் வடசேரி அம்மா உணவகம் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

நாகர்கோவில் மாநகராட்சி கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளர்  உத்தரவின் படி வடசேரி அம்மா உணவகத்தில் இருந்து காலை மற்றும் மதியம் என இரு வேளைகளிலும் உணவுகள் தயாரித்து உணவு பொட்டலங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆசாரிப்பள்ளம் அம்மா உணவகம் தற்சமயம் செயல்படவில்லை.

இதனால் வடசேரி அம்மா உணவகத்தில் இருந்து கூடுதலாக உணவுகள் தயாரித்து ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி உணவு பொட்டலங்கள் வாங்கி சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory