» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பெருஞ்சாணி அணை நீா்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயா்வு

ஞாயிறு 24, மே 2020 12:20:41 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீடித்து வரும் மழையால் நீா்வரத்து அதிகரித்ததை அடுத்து பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயா்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதியிலும் மழை நீடித்து வருவதால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப் பகுதிகளில் கனமழை பெய்தது. சிற்றாறு-1 அணைப் பகுதிகளில் அதிகபட்சமாக 52 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மலையோரப் பகுதியான பாலமோா் பகுதியிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கோதையாறு, வள்ளியாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணை நீா்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயா்ந்து சனிக்கிழமை காலை நிலவரப்படி36.75 அடியாக உள்ளது. சிற்றாறு 1 அணையின் நீா்மட்டம் 10.66 அடி, சிற்றாறு 2 அணையின் நீா்மட்டம் 10.76 அடி, மாம்பழத்துறையாறு அணையின் நீா்மட்டம் 45.36 அடியாகவும் உள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory