» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பத்தாம் வகுப்பு தேர்வு நடத்த தயாராகும் பள்ளிகள்

சனி 23, மே 2020 6:34:10 PM (IST)

கன்னியாகுமரி அருகே உள்ள குலசேகரபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்காக பள்ளி வளாகத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று வேகமாக பரவிகிறது. இதனை முன்னிட்டு பள்ளிகளில் நடந்து வந்த பிளஸ்-2 பொதுத்தேர்வு மட்டும் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது . ஆனால் கடந்த மார்ச் மாதம் தொடங்க இருந்த 10-ம்வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் ரத்து செய்யப்பட்டது.தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற ஜுன் 15 நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதையொட்டி தேர்வு மையமாக செயல்படும் அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பணிகளை மேற்கொள்ள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனை தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள குலசேகரபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம்வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்காக பள்ளி வளாகத்தை சீரமைத்து தரும்படி பள்ளி தலைமை ஆசிரியை ஜெயசாந்தி குலசேகரபுரம் பஞ்சாயத்து தலைவர் சுடலையாண்டியிடம் கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து குலசேகரபுரம் பஞ்சாயத்து சார்பில் 100 நாள் வேலை திட்டம் பணியாளர்கள் மூலம் பள்ளி வளாகத்தில் வளர்ந்து கிடந்த புல் பூண்டுகள் செடி கொடிகள் மற்றும் புதர்களை வெட்டி அகற்றும் பணி நடந்தது.

மேலும் பள்ளி மைதானம், பள்ளி வளாகத்தில் தூய்மை பணியாளர்கள் மூலம் பிளீச்சிங்க் பவுடர் போடுதல், கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக ஊராட்சி சார்பில் பள்ளி மாணவ மாணவிகள் கைக்கழுவ பயன்படுத்தும் பகுதியில் உள்ள குடிநீர் நல்லிகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory