» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கொரோனா வார்டில் உள்ளவர்களுக்கு மீண்டும் சோதனை

சனி 23, மே 2020 6:15:24 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வார்டில் உள்ளவர்களுக்கு மீண்டும் சோதனை நடத்தப்படுகிறது.

குமரி மாவட்டத்தில் மே மாத தொடக்கத்தில் கொராேனாதொற்று கட்டுக்குள் இருந்த நிலையில்  வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் வருபவர்களாக கொரோனா தொற்று பரவி வருகிறது.குமரி மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 51 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 22 பேர் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பினார்கள். மயிலாடியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் பலியானார்.

இன்று காலை கொரோனா வார்டில் 22 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா வார்டில் உள்ள 22 பேரையும் டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதில் இன்று 5 பேருக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை நடக்கிறது. இவர்களுக்கு கொரோனா தொற்று நீங்கும் பட்சத்தில் நாளை அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்.மாவட்டம் முழுவதம் இதுவரை 11,091 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 10,696 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளி மாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 342 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.


மக்கள் கருத்து

அருண்மே 23, 2020 - 09:01:10 PM | Posted IP 117.2*****

எனக்கெனமோ நம்ம நாட்டுல பொய்யா கணக்கு காட்டுராணுங்களோன்னு தோணுது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory