» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வட்டி தள்ளுபடி சலுகை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது : வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு

சனி 23, மே 2020 5:17:06 PM (IST)

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் திட்டங்களில் மனை/வீடு குடியிருப்பு ஒதுக்கீடு பெற்றவர்கள் கிரையம் முடிக்க வட்டி தள்ளுபடி சலுகை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் திட்டங்களில் மனை/வீடு குடியிருப்பு ஒதுக்கீடு பெற்றவர்களில், விற்பனைப் பத்திரம் பெறாமல் இருந்தவர்களுக்கு மாதாந்திர தவணை செலுத்தத் தவறியதற்கான அபராத வட்டி, வட்டி முதலாக்கத்தின் மீதான வட்டி ஆகியன முழுமையாகவும் நிலத்தின் இறுதி மதிப்பீடு வேறுபாட்டின் பேரிலான வட்டியில் ஒவ்வொரு ஆண்டிற்கும் 5 மாத வட்டி ஆகியவற்றினை தள்ளுபடி செய்து, அரசு ஆணை பிறப்பித்தது. இவ்வாணையின் படி 31.03.2020 வரை முடிவடைந்த கால, மேற்கண்ட வட்டித் தள்ளுபடி சலுகை, தற்பொழுது 30.09.2020 அன்று வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, திருநெல்வேலி வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட பாளை பகுதி - 1,2,3,4,5,6, வள்ளியூர் , தென்காசி, ஏ.ஆ. சத்திரம், கீழநத்தம், சுத்தமல்லி , நாரணம்மாள்புரம் பகுதி - 1, 2, குலவணிகர்புரம், வல்லன்குமார விளை பகுதி -1,2 கோணம்(நாகர்கோவில்), சங்கரப்பேரி எஸ்எம்டி மனை மற்றும் வீடுகள், சங்கரப்பேரி தன்னிறைவு வீட்டு மனை திட்டம், மீளவிட்டான் மற்றும் கோவில்பட்டி பகுதி – 2 திட்டங்களில் விற்பனைப் பத்திரம் பெற்றிடாத தகுதியுள்ள ஒதுக்கீடுதரார்கள். மேற்படி வட்டி தள்ளுபடி சலுகையின் மூலம் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினை ஒரே தவணையில் செலுத்தி தங்களது ஒதுக்கீட்டிற்கான கிரையப் பத்திரங்களை உடன் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  மேலும், இந்த வட்டித் தள்ளுபடி சலுகையானது 30.09.2020 வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும், கால நீட்டிப்பு செய்யப்படமாட்டாது. ஆகவே தகுதியுள்ள ஒதுக்கீடுதாரர்கள் இந்த அரிய வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு மீண்டும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory