» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஒரே குடும்பத்தில் 3 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்

சனி 23, மே 2020 12:13:53 PM (IST)

ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் ஒரே குடும்பத்தில் 3 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்

நாகர்காேவில் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 26 பேரில் நாகர்கோவிலை அடுத்த ஆளூர் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் ஆவர். இவர்கள் சென்னையில் இருந்து குமரிக்கு வந்தவர்கள். இதற்கிடையே அவர்களுக்கு மீண்டும் நடத்தப்பட்ட பரிசோதனையில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று நீங்கியிருந்தது தெரிய வந்தது. கணவருக்கு கொரோனா பாதிப்பு நீங்கவில்லை. 

இதையடுத்து அந்த பெண் மற்றும் 2 குழந்தைகளையும் ஆஸ்பத்திரி டாக்டர்கள் வாழ்த்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களும் மகிழ்ச்சியோடு, டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்து புறப்பட்டுச் சென்றனர். இதனால் மருத்துவ மனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 23 ஆக குறைந்துள்ளது. முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory