» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திற்பரப்பு அருவியில் கடும் வெள்ளப் பெருக்கு

சனி 23, மே 2020 11:50:22 AM (IST)

குமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை விடிய விடிய பெய்த மழையால் ஆறுகள் மற்றும் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது. திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

குமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவில் தொடங்கிய மழை வெள்ளிக்கிழமை அதிகாலை வரை இடைவிடாது கன மழையாகப் பெய்தது.இந்த மழை அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் கன மழையாகவவும், இதரப் பகுதிகளில் மிதமான மழையாகவும் பெய்தது.மழையால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து காணப்பட்டது.  பொது ஊரடங்கு முடக்கம் காரணமாக திற்பரப்பு அருவி மூடப்பட்டு, இங்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படாத நிலை இருந்து வருகிறது.இந்நிலையில் கன மழை காரணமாக இந்த அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்துக் கொட்டியது. மேலும் கோதையாறு, பரளியாறு, பழையாறு, வள்ளியாறு, முல்லையாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் அதிகரித்துக் காணப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory