» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பெண்களிடம் மோசடி செய்த காசியிடம் மீண்டும் போலீசார் விசாரணை

வெள்ளி 22, மே 2020 1:44:57 PM (IST)

பெண்களிடம் பணம் பறித்த விவகாரத்தில் காசியிடம் மீண்டும் போலீசார் விசாரணையை தொடங்கினர். 

நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சுஜி என்ற காசி (26). இவர், தங்களை ஆபாச படம் எடுத்து அதை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு விடுவதாக மிரட்டி பணம் பறித்ததாக 3 பெண்கள் அளித்த புகாரின்பேரில் காசியை குண்டர் சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
 
ஏற்கனவே 3 நாட்கள் காசியை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவருடன் நெருக்கமாக இருந்த நண்பர் டேசன் ஜினோவை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து காசியை 6 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நேற்று முன்தினம் கோர்ட்டு அனுமதி அளித்தது. உடனே காசியை மகளிர் போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.காசியால் பாதிக்கப்பட்ட பெண்களின் பட்டியலில் பட்டதாரி இளம்பெண்கள், முக்கிய பிரமுகர்களின் மனைவி, டாக்டர், என்ஜினீயர் உள்ளிட்டோர்தான் இடம் பெற்று இருந்தனர். 

புதிதாக சிறுமி ஒருவர் புகார் கொடுத்து இருப்பதால் காசி ஏராளமான சிறுமிகளிடமும் அத்துமீறி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.எனவே காசியிடம் 6 நாட்கள் காவலில் விசாரணை நடத்தப்படுகிறது. விசாரணை முடிவில் காசியால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பட்டியல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே காசி விவகாரத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory