» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் கடைகள் இரவு 7 மணி வரை இயங்க அனுமதி

வெள்ளி 22, மே 2020 10:39:18 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை  மாலை  5 மணி வரை கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுயிருந்த நிலையில் இன்று (22 ம் தேதி) முதல் மாலை 7 மணி வரை கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையிலும், களபணியாளர்கள் மூலமாகவும் 10516 நபர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.  இதில் 16 பேர் மட்டும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 33 பேர் வெளி மாவட்டங்கள்,மாநிலங்கள்,நாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள். 10230 பேருக்குகொரோனா நோய்த்தொற்று இல்லை. மீதமுள்ள நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு பரிசோதனை முடிவுகள் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கன்னியாகுமரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 24 பேர் சிகிச்சையில் உள்ளனர்.கொரோனா நோய்த்தோற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 24 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 342 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.ஊரடங்கு உத்தரவை மீறிய வகையில் நேற்று மட்டும் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தத்தில் இதுவரை 7793 வழக்குகளும், 5858 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory