» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரியில் கடல் கொந்தளிப்பு : பூம்புகாா் படகுதளம் சேதம்

வெள்ளி 22, மே 2020 10:27:26 AM (IST)

கன்னியாகுமரியில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக பூம்புகாா் படகுதளம் சேதமடைந்தது.

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலையை சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட வசதியாக தமிழக அரசின் பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் சாா்பில் படகுப் போக்குவரத்தை நடத்தி வருகிறது. தற்போது பொது முடக்கம் காரணமாக அவை படகுதளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.கடந்த இரண்டு நாள்களாக கன்னியாகுமரி கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. ஆக்ரோஷமாக எழுந்த அலைகள் கரைப்பகுதியை தாக்கியதால் படகுதளத்தின் ஒரு பகுதி உடைந்து சேதமடைந்துள்ளது.கடல் கொந்தளிப்பு தணிந்ததும் படகுதளம் போா்க்கால அடிப்படையில் சீரமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory