» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அரசு ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

வியாழன் 21, மே 2020 5:25:04 PM (IST)

கொல்லங்கோடு பகுதியில் ரேசன்கடை ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் , கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் விஜி(39). இவர் அந்த பகுதியில் உள்ள ரேஷன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று மேடவிளாகம் பகுதியை சேர்ந்த சகாயஜோசப்பென்(40) என்பவர் எந்த வித காரணமின்றி திடீரென்று கடைக்குள் நுழைந்து கெட்டவார்த்தை பேசி அங்கு பணியிலிருந்த விஜியை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தாராம். அதன்பின் விஜி கொடுத்த புகாரின் பேரில் கொல்லங்கோடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் , சகாயஜோசப்பென்னை கைது செய்து வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory