» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவரின் மகனுக்கு அரசு பணி நியமன ஆணை வழங்கல்

வியாழன் 21, மே 2020 3:47:08 PM (IST)தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவரின் மகனுக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை ஆட்சியர் வழங்கினார்

தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர். இதில், உயிரிழந்த கிளாஸ்டன் என்பவரின் மகன் ஜெனிஸ்டன் என்பவருக்கு ஓட்டப்பிடாரம் வட்டம் வேப்பலோடை கிராமத்தில், கிராம உதவியாளர் பணிக்கு நியமனம் செய்து அதற்கான பணி நியமன ஆணையினை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணு சந்திரன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் இராஜசெல்வி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

கர்ணராஜ்மே 21, 2020 - 04:49:50 PM | Posted IP 173.2*****

Good remedy. Positive action of govt

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory