» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஆவின் பால் பொருட்கள் புதிய விற்பனை அங்காடி : எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ திறந்து வைத்தார்

வியாழன் 21, மே 2020 1:53:49 PM (IST)ஏரல் அருகே பண்ணைவிளையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய ஆவின் பால் பொருட்கள் விற்பனை அங்காடியை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பண்ணைவிளையில் புதிய ஆவின் பாலகம் மற்றும் பால் பொருட்கள் விற்பனை அங்காடி திறப்பு விழா நிகழ்ச்சி தூத்துக்குடி ஆவின் பொது மேலாளர் திருயோகராஜ் தங்கையா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிஎஸ்ஐ சேகர குரு டேவிட் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ புதிய ஆவின் பால் பொருட்கள் விற்பனை அங்காடியை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், ஆழ்வார்திருநகரி முன்னாள் யூனியன் சேர்மன் விஜயகுமார், பண்ணைவிளை வெற்றிராஜ், அதிமுக பிரமுகர்கள் வேதமாணிக்கம், பண்டாரவிளை பொன்ராஜ், பெருமாள், பால்துரை, சுரேஷ், திருத்துவராஜ், எபன் உட்பட பலர் இருந்தனர்.


மக்கள் கருத்து

Tuticorianமே 21, 2020 - 05:55:48 PM | Posted IP 108.1*****

Mask - ? Social distancing - ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory