» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மைனர் பெண் காதலை தடுக்க அவசரத் திருமணம் : 6 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு

புதன் 20, மே 2020 5:38:19 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே 17 வயது சிறுமியை காதலித்த இளைஞர், காதலை தவிர்க்க அவசர திருமணம் செய்து வைத்த பெற்றோர், மாமனார், மாமியார், கணவர் என 6 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த 17 வயது இளம்பெண் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்த நிலையில் தினமும் கல்லூரி சென்று வந்த போது சாலையோரம் கடைவைத்திருந்த சுதீஷ் என்பவருடன் பழகி வந்ததாக கூறப்படுகின்றது. இந்த விவரம் அந்த மாணவியின் பெற்றோருக்கு தெரியவர, ஊரடங்கு நேரத்திலும் மகளுக்கு, அவசர அவசரமாக தங்கள் சாதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை பேசி முடித்துள்ளனர். இரு வீட்டு பெற்றோர் மட்டும் கலந்து கொள்ள  மாணவியின் வீட்டில் வைத்தே ரகசியமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது  .

திருமணத்தன்று இரவு அறைக்குள் கணவர் சென்ற போது அந்த மாணவி தனது காதலனுடன் செல்போனில் பேசிக் கொண்டு இருந்துள்ளார். இதை பார்த்த கணவர் விவேக், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சொல்லாமல் கொள்ளாமல் அங்கிருந்து சென்று விட, உடனடியாக வீட்டிற்கு தனது காதலனை வரவழைத்துள்ளார் அந்த மாணவி . இதை தொடர்ந்து வீட்டிற்குள் நுழைந்த காதலன், கையும் களவுமாக அந்த மாணவியின் தந்தையிடம் சிக்கி உள்ளான்.

இதையடுத்து அந்த வாலிபரை போலீசில் ஒப்படைத்துள்ளனர்.தனது காதலனை காப்பாற்றுவதாக நினைத்து தனக்கு 17 வயது தான் ஆவதாகவும், பெற்றோர் தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்து விட்டதாக போலீசாரிடம் மாணவி தெரிவித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் மாணவியின் பெற்றோருடன் சேர்த்து காதலன் சுதீஷையும் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

மாணவிக்கு 17 வயது மட்டுமே ஆவதால் அவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த தாய் தந்தை, தாலிகட்டி தலைமறைவு தியாகியான கணவர் விவேக், மாமனார், மாமியார் ஆகியோர் மீதும் சிறுமியின் மனதை காதல் ஆசை காட்டி கெடுத்ததாக காதலன் சுதீஷ் ஆகியோர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.இதற்கிடையே தங்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யபோவதை அறிந்த மாணவியின் பெற்றொர், மற்றும் மாமனார் மாமியார் போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி விட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory