» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சுதந்திரத்திற்கு முன் நகராட்சியில் எழுத்தராக பணியாற்றிவர் கெளரவிப்பு

புதன் 20, மே 2020 12:41:15 PM (IST)



இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு நாகர்கோவில் நகராட்சியில் எழுத்தராக பணியாற்றிவர் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் கெளரவிக்கப்பட்டார்.

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு நாகர்கோவில் நகராட்சியில் எழுத்தராக பணியைத் துவங்கிய இராமசாமி பிள்ளை கும்பகோணத்தில் மேலாளராக1986-ல் பணி ஓய்வு பெற்றார். 1946-ல் சுதந்திரத்திற்கு முன்பு பணியில் சேர்ந்த இவரை ஏறத்தாள 74 ஆண்டுகளுக்குப் பிறகு ராமசாமி பிள்ளையை நேரில் அழைத்து ஆணையர் சரவணகுமார் கௌரவித்தார்.

அப்பொழுது தமது நகராட்சி பணிகள் குறித்தும், 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பொழுது நாகர்கோவில் நகராட்சியில் முதன் முறையாக தேசிய கொடி ஏற்றியது மற்றும் 1958ம் ஆண்டு நாகர்கோவில் நகராட்சி கொச்சி திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரிந்து சென்னை உடன் இணைந்த போது நகராட்சி எப்படி தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது போன்ற சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். மேலும் அவருக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory