» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

காசி வழக்கில் ஆஜராக கூடாது என தீர்மானம் : நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கம் அதிரடி

வியாழன் 14, மே 2020 1:00:43 PM (IST)

நாகர்கோவிலில் பல பெண்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளா காசிக்கு ஆதரவாக ஆஜராக மாட்டோம் என நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

பள்ளி, கல்லூரி மாணவிகள்,  குடும்பப் பெண்கள் ஆகியாேருடன் பழகி பின்பு அவர்களை மிரட்டி பணம் பறித்த நாகர்கோவிலைச் சேர்ந்த சுஜி என்ற காசி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில்  நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர் சங்கம் சார்பில் காசி வழக்கில் அவருக்கு ஆதரவாக ஆஜராக கூடாது என  தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என நாகர்கோவில் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ராஜேஷ் கூறும் போது, நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்பவர் மீது பெண்களை ஏமாற்றுதல், ஆபாச படம் எடுத்து இணையத்தில் வெளியிடுதல், பெண்களை மிரட்டி பணம் பறித்தல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்காக காவல்துறை வழக்குப்பதிவு செய்து மேற்படி வழக்குகள் நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. காசியின் செயல்கள் மனித குலத்திற்கே எதிராக இருப்பதால் அவர் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளில் நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள் என எங்களது சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளோம். இதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள எந்த ஒரு வழக்கறிஞரும் காசிக்கு ஆஜராக மாட்டார்கள் என தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory