» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பேருந்து நிலையத்தில் பிரம்மாண்டமான ஓவியம் : விஜய்,அஜித் ரசிகர்கள் இணைந்து வரைந்தனர்

சனி 25, ஏப்ரல் 2020 11:19:06 AM (IST)


நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அஜீத் மற்றும் விஜய் ரசிகர்கள் இணைந்து பிரமாண்ட ஓவியம் வரைந்தனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் தடுப்புகள் அமைத்து பொது மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அத்தியாவசிய பொருட்கள் வாங்கி செல்ல மட்டுமே அனுமதிக்கின்றனர். இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சியின் ஒத்துழைப்புடன் குமரிமாவட்ட அஜித் ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் இணைந்து அண்ணா பேருந்து நிலையத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரமாண்ட ஓவியம் வரைந்துள்ளனர். விழிப்புணர்வு நோக்கில் வரையப்பட்ட இந்த ஓவியத்தை பலரும் ரசித்தனர்.மேலும் சமூக வலை தளங்களில் ஷேர் செய்தும் வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory