» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க வாஷ்கோ எந்திரம்

புதன் 15, ஏப்ரல் 2020 5:13:59 PM (IST)

கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க வாஷ் கோ எந்திரத்தை கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த நபர் வடிவமைத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பொதுமக்களை காக்க இந்தியாவில் வரும் மே 3 ம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் கோவிட் 19 பரவலை தடுக்க பொது இடங்களில் செல்வோர் சோப்பு போட்டு கை கழுவும் பழக்கத்தை கட்டாயம் கடைபிடிக்கவேண்டும் என்கிறது சுகாதாரத் துறை . இவ்வாறு கைகழுவ தண்ணீர் திறக்கும் போது கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்கிறது வாஷ் கோ எந்திரம்.

கடையாலுமூடு பகுதியை சார்ந்த பாபு என்பவர் வாஷ்கோ வை வடிவமைத்துள்ளார். வாஷ்கோவிலுள்ள படல் ஒன்றில் மிதித்தால் நல்லி வழியாக தண்ணீர் வெளியேறும். இன்னொரு படலில் மிதித்தால் சோப் கலவை வரும். கருவியில் கைகள் படாமலே கைகள் கழுவி சுத்தம் செய்யலாம் .கடையாலுமூடு காவல் நிலையத்திலும், களியல் ஜங்ஷனிலும் வாஷ் கோவை பொதுமக்கள் பயன்படுத்த வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிதடதக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory