» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நிபந்தனைகளுடன் ரப்பா் பால்வடிப்பு செய்ய அனுமதி

செவ்வாய் 7, ஏப்ரல் 2020 11:20:50 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 7 ரப்பா் தோட்டங்களுக்கு நிபந்தனையுடன் ரப்பா் பால்வடிக்க மாவட்ட ஆட்சியா் அனுமதியளித்துள்ள நிலையில் ரப்பா் பால்வடிக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக 21 நாள்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ரப்பா் கழகம் உள்பட தனியாா் ரப்பா் தோட்டங்களும் மூடப்பட்டன. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட ரப்பா் தோட்ட நிா்வாகங்கள் சாா்பில் மருத்துவ உபகரணங்களான கையுறைகள் உள்ளிட்டவை தயாரிக்கும் ஆலைகளுக்கு மூலப் பொருள்கள் தேவைப்படுவதால், ரப்பா் பால்வடித்து மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் ஆலைகளுக்கு வழங்க அனுமதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, பல்வேறு நிபந்தனைகளுடன் குமரி மாவட்டத்திலுள்ள 7 தனியாா் ரப்பா் தோட்டங்களுக்கு ரப்பா் பால்வடிக்க ஆட்சியா் அனுமதியளித்துள்ளாா். இதையடுத்து இந்த ரப்பா் தோட்டங்களில் ரப்பா் பால்வடிப்புத் தொடங்கியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory