» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

காய்கறி தொகுப்பு இல்லங்களுக்கே விநியோகம் : நாகர்கோவில் மாநகராட்சி நடவடிக்கை

திங்கள் 6, ஏப்ரல் 2020 6:06:50 PM (IST)

நாகர்கோவிலில் கரோனா தொற்றை தடுப்பதற்கு சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ரூ.100, 150, 200 என்ற மூன்று விலைகளில் காய்கறி தொகுப்புகளை நேரடியாக வீடுகளுக்கே சென்று மாநகராட்சியினர் விநியோகம் செய்து வருகின்றனர்.

கரோனா தொற்றை தடுக்கும் வகையில் குமரி மாவட்டத்தில் சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, மற்றும் உள்ளாட்சி துறையினர் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.மதியம்  வரை மளிகைக்கடை, காய்கறி கடைகள் அனுமதிக்கப்படும் நேரங்களில் சமூக இடைவெளியையும் மீறி முக்கிய இடங்கில் கூட்டம் அதிக அளவில் கூடுகிறது.இவற்றை சீர்செய்யும் வகையில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தலைமையில் அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் மாநகராட்சி வாகனங்களில் காய்கறிகளை நேரடியாக வீடுகளுக்கே சென்று அலுவலர்கள் வழங்கினர்.அத்தியாவசியமான தக்காளி, வெங்காயம், உருளைகிழங்கு உட்பட 11 வகை காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பொட்டலமிடப்பட்டு வழங்கப்பட்டது.இவை ரூ.100, ரூ.150, ரூ.200 என்ற 3 வகை தொகுப்புகளில் வழங்கப்பட்டது.

நாகர்கோவில் இளங்கடை, கரியமாணிக்கபுரம், கோட்டாறு, இளங்கடை போன்ற பகுதிகளில இந்த காய்கறி தொகுப்புகள் நேரடியாக விற்பனை செய்யப்பட்டன.தொடர்ந்து நகரப் பகுதிகளில் சுழற்சி முறையில் இந்த காய்கறிகளை விற்பனை செய்ய நகராட்சியினர் திட்டமிட்டுள்ளனர். இந்த வீடுதேடி சென்று காய்கறி விற்பனை செய்யும் நடைமுறை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory