» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பீலா ராஜேஷ் பற்றி அவதூறு பதிவு : சுப.உதயகுமாரன் மீது வழக்குப்பதிவு

திங்கள் 6, ஏப்ரல் 2020 1:35:20 PM (IST)

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் குறித்து அவதூறு செய்தி வெளியிட்டதாக அணுஉலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மாநில சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் குறித்து தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் அணுஉலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் அவதூறு கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. அதிமுக அரசையும், முதலமைச்சர் பழனிசாமியையும் குறிப்பிட்டு ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்றை பகிர்ந்து சுப.உதயகுமார் பதிவிட்டதாக தெரிகிறது.

இது குறித்து கன்னியாகுமரி மாவட்டம் வடிவீஸ்வரம் கிராம நிர்வாக அதிகாரி மோகன் என்பவர் போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் அணுஉலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் மீது கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory