» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்காேவிலில் சூப்பர் மார்க்கெட்டிற்கு சீல்

திங்கள் 6, ஏப்ரல் 2020 12:32:50 PM (IST)



நாகர்காேவிலில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததாக சூப்பர் மார்க்கெட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வரும் 14ம் தேதி வரை நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சிறுவர், சிறுமியர்கள் என அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர். தேவையின்றி வாகனங்களில் சுற்றுவோர் மீது வழக்குப்பதியப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலை அருகே அரசின் தடையை மீறி சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் சூப்பர் மார்க்கெட்டுக்குள் பொதுமக்களை அனுமதித்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் கிங்சால் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகளால் கடைக்கு பூட்டு போடப்பட்டுள்ளது.மேலும் அரசின் ஊரடங்கு உத்தரவு முடியும் வரை கடையை திறக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory