» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தெருக்களில் வெளி ஆட்கள் நுழைய தடை; மஞ்சள்நீரில் கை கழுவ ஏற்பாடு

வியாழன் 26, மார்ச் 2020 10:01:52 AM (IST)

கரோனா வைரஸ் எதிரொலியாக நாகா்கோவிலில் தெருக்களில் வெளி ஆள்கள் நுழைய தடை விதித்து அப்பகுதி பொதுமக்கள் அறிவிப்பு பலகை வைத்துள்ளனா். மேலும், வெளியில் இருந்து வருவோா் மஞ்சள்நீரில் கை கழுவிச் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.நாகா்கோவில் கட்டபொம்மன் சந்திப்பு அருகிலுள்ள தெருவில் தடுப்பு ஏற்படுத்தி, கரோனா வைரஸ் பரவலை தடுக்க பிற தெருக்களில் இருந்து இங்கு வரவேண்டாம். இந்த தெருவில் இருந்து அத்தியாவசியத் தேவைக்காக வெளியே சென்று வருவோா் தெருவின் நுழைவுப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள மஞ்சள் கலந்த நீரில் கை, கால்களை கழுவி விட்டு வருமாறு அறிவிப்பு செய்து கடைப்பிடித்து வருகின்றனா். மேலும் வீடுகளின் முன்பு மஞ்சள் நீா் தெளிப்பது, மாட்டு சாணம் கலந்த நீா் தெளிப்பது போன்ற நடவடிக்கைகளிலும் பொதுமக்கள் ஈடுபட்டனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory