» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வெளிநாட்டில் பணிபுரிந்து வீடு திரும்பியர்கள் தீவிர கண்காணிப்பு

புதன் 25, மார்ச் 2020 12:08:30 PM (IST)

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வெளிநாட்டில் பணிபுரிந்து வீடு திரும்பியவர்களை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது உலகையை கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் நாகர்காேவிலிலும் மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் வடசேரி அருகே வெளிநாட்டில் பணிபுரிந்து வீடு திரும்பிய நபரை அந்த வீட்டின் உரிமையாளர் காலி செய்ய நிர்பந்தம் செய்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து ஆணையர்  சரவணகுமார் மற்றும் மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் கிங்சால் உள்ளிட்டோர் அந்த வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் வெளிநாட்டில் இருந்து வீடு திரும்பிய நபர்கள் வாடகை வீட்டில் வாசிக்கும் பட்சத்தில் அந்த வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்ய நிர்பந்தம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் எச்சரித்துள்ளார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory