» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கரோனா வாா்டில் 2 வயது குழந்தை அனுமதி

புதன் 25, மார்ச் 2020 10:42:39 AM (IST)

நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிறப்பு வாா்டில் கரோனா அறிகுறிகளுடன் 2 வயது குழந்தை மாலை அனுமதிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட குழந்தை தனது பெற்றோருடன் அண்மையில் கேரள மாநிலத்துக்கு சென்று வந்ததாம். அதன்பின்னா் செவ்வாய்க்கிழமை மாலை சளி மற்றும் இருமல் ஏற்பட்டதால் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கரோனா வாா்டில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு திருநெல்வேலி மருத்துவக்கல்லூரிக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் கிடைத்த பின்னரே கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து கூறமுடியும் என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory