» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தோவாளை பூ சந்தை காலவரையின்றி மூடல்

செவ்வாய் 24, மார்ச் 2020 8:01:13 PM (IST)

பிரசித்தி பெற்ற தோவாளை பூ சந்தை காலவரையின்றி மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணிக்கு 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. மார்ச் 31ம் தேதி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும்.தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்த நிலையில், மார்ச் 31ம் தேதி வரை பேருந்து, ஆட்டோ, கால் டாக்ஸி உள்ளிட்ட போக்குவரத்துகள் இயக்கப்படாது.பொதுமக்கள் 5 பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. 

இந்நிலையில் 144 தடையால் குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தோவாளை பூ சந்தை காலவரையின்றி மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரம் சந்தையை மூடுவதால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory