» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வீட்டின் பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளை

செவ்வாய் 24, மார்ச் 2020 6:04:22 PM (IST)

நாகர்கோவில் அருகே வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

நாகர்கோவில் பழவிளை பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (45).இவர் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டினுள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்களும் சிதறி கிடந்தது.மேலும் பீரோவில் இருந்த வெள்ளி கப் 3, பூஜை அறையில் இருந்த வெள்ளி விநாயகர் சிலை ஆகியவை கொள்ளை போனது தெரிய வந்தது. 

இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பூஜை அறை, கதவின் பூட்டு உடைக்கப்பட்ட இடம் ஆகிய இடங்களில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.அந்த பகுதியில் போலீசார் தீவிர சோதனையிலும் ஈடுபட்டனர்.  கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory