» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தமிழக-கேரள எல்லையில் 36 சோதனைச் சாவடிகள் மூடல்

செவ்வாய் 24, மார்ச் 2020 11:36:45 AM (IST)

கரோனா வைரஸ் எதிரொலியாக தடுக்க தமிழக-கேரள எல்லையில் உள்ள 36 சோதனைச் சாவடிகள் மூடப்பட்டன.

கேரளத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால் அருகிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகமும், சுகாதாரத்துறையும் தீவிரப்படுத்தியுள்ளன. முதல்கட்டமாக கேரளத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வரும் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளித்த பின்னா் அனுமதிக்கப்பட்டன. மேலும், பேருந்துகள், வாகனங்களில் பயணம் செய்தவா்களும் மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனா்.

அடுத்தக் கட்டமாக இம்மாவட்டத்தில் இருந்து கேரளத்துக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கேரளத்தில் இருந்தும் பேருந்துகள் கன்னியாகுமரி மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. அத்தியாவசிய வாகனங்கள் மட்டும் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டன. இதனிடையே, அடுத்த கட்ட நடவடிக்கையாக தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகள் மூடப்பட்டுள்ளன.

தமிழக-கேரள எல்லையில் செயல்பட்டு வந்த 39 சோதனைச் சாவடிகளும் ஞாயிற்றுக்கிழமை முதல் மூடப்பட்டன. இந்த சோதனைச் சாவடிகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன. இதனால் இந்த வழியாக அத்தியாவசிய வாகனங்கள் கூட செல்ல அனுமதிக்கப்படவில்லை. படந்தாலுமூடு, மாா்க்கெட் ரோடு, சிறிய கொல்லா ஆகிய 3 சோதனைச்சாவடிகளில் மட்டும் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory