» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் குறித்த தகவல் : பொதுமக்களுக்கு குமரி ஆட்சியர் அறிவிப்பு

செவ்வாய் 24, மார்ச் 2020 11:12:27 AM (IST)

வெளிநாடுகளிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்திருக்கும் நபர்களை குறித்த விவரங்களை பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறைக்கு தெரியப்படுத்தும்படி மாவட்டஆட்சியர் பிரசாந்த் வடநேரே,  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுக்க பல்வேறு தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனாவைரஸ்  நோய் தொற்று பரவலை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளிலிருந்து குமரிமாவட்டத்திற்கு வருகின்ற அனைவரும் சுகாதாரதுறையினர் மூலம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.  

வெளிநாடுகளில் இருந்து கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுபரவாமல் இருப்பதற்கு 01.03.2020 முதல் நாளதுவரையில் (23.03.2020) குமரி மாவட்டத்திற்கு வந்துள்ள நபர்கள் பற்றிய விபரங்களை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் செயல்படும் 1077 என்ற தொலைபேசி எண்ணில் உடனடியாக தகவல்கள் தெரிவிக்குமாறு மாவட்டஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory