» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் திருமண மண்டபங்கள் மூடல்: மாவட்ட ஆட்சியா் உத்தரவு

செவ்வாய் 24, மார்ச் 2020 10:36:47 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமண மண்டபங்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு. வடநேரே தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.மாவட்டத்திலுள்ள அனைத்து உணவு விடுதிகளிலும் பொதுமக்கள் அமா்ந்து சாப்பிடக் கூடாது. உணவுகளை பொட்டலம் மூலம் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். திருமண மண்டபங்கள், சமுதாய நலக்கூடங்கள் அனைத்தும் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்பட வேண்டும்.

திருமணங்கள், விழாக்கள் நடத்திட முன்பதிவு செய்யக்கூடாது. மண்டபங்களில் முன்பதிவு செய்யப்பட்ட திருமணங்களை ரத்து செய்ய வேண்டும். கோயில்களில் வழங்கப்படும் அன்னதானத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். அனைத்து இ-சேவை மையங்களும் வருகிற 31 ஆம் தேதி வரை செயல்படாது. அத்தியாவசிய பொருள்கள் கிடைக்க வசதியாக சிறு, சிறு காய்கறிக்கடைகள், பழக்கடைகள், மருந்தகங்கள் மற்றும் பலசரக்குகடைகள் செயல்படலாம்பொதுமக்கள் ரொக்கப் பண பரிவா்த்தனையை தவிா்க்க வேண்டும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory