» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை : தொழிலாளி கைது

திங்கள் 23, மார்ச் 2020 8:19:55 PM (IST)

மணவாளக்குறிச்சி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை குளச்சல் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியை அடுத்த சேரமங்கலம், புதுவயல் பகுதியை சேர்ந்தவர் ஹரிதாஸ் (49). தொழிலாளி.ஹரிதாஸ் வீடு அருகே ஒரு குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு சுமார் 13 வயதில் ஒரு மகள் உள்ளார். 8-ம் வகுப்பு படித்து வரும் அந்த மாணவி, சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தார்.

அப்போது ஹரிதாஸ், மாணவி வீட்டுக்கு சென்றார். அவர் தனியாக இருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவி அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களை கண்டதும் ஹரிதாஸ், அங்கிருந்து தப்பியோடினார்.

பெற்றோர் வீடு திரும்பியதும் இது பற்றி மாணவி, அழுதுக்கொண்டே தெரிவித்தார். அவர்கள் இது பற்றி குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.போலீசார் விசாரணை நடத்தி ஹரிதாசை பிடித்தனர். அவர் மீது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory