» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குளச்சலில் முன்னாள் பாஜக நிர்வாகி மீது தாக்கு : 4 பேர் மீது வழக்கு

வியாழன் 5, மார்ச் 2020 8:17:41 PM (IST)

குளச்சலில் முன்னாள் பாஜக நிர்வாகி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக 4 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே ரீத்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் கதிரேசன் (43) இவர் முன்னாள் பாஜக நிர்வாகி ஆவார். தற்போது ஊர் கோவிலில் செயலாளராக உள்ளார். இந்த கோயிலில் அதே பகுதியை சேர்ந்த சிலர் மோட்டார் பைக்குகளை நிறுத்துவதை தொடர்ந்து செய்து வந்துள்ளனர் .இதனால் சம்பவத்தன்று அதே ஊரை சேர்ந்த சிலருக்கும் கதிரேசனுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. 

இதற்கிடையே சம்பவத்தன்று மாலை கதிரேசன் இரும்பிலியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜாராம் உட்பட 4 பேர் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் கதிரேசனின் மனைவி ராணி தடுத்துள்ளார். அவர்கள் 4 பேரும் ராணியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த 2 பேரும் குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து கதிரேசன் குளச்சல் போலீசில் புகார் செய்ததின் பேரில் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory