» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

உணவகங்களுக்கு நாகர்கோவில் மாநகராட்சி அறிவிப்பு

வியாழன் 5, மார்ச் 2020 7:25:08 PM (IST)

வரும் 11 ம் தேதி நாகர்கோவில் மாநகராட்சிக்குப்பட்ட உணவு தயாரித்தல் , உணவு விற்பனை செய்யும் கடைகளுக்கான கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சாலையோரங்களில் திறந்தவெளியில் சுகாதாரமற்ற முறையில் உணவுகளை தயாரிக்க தடை செய்ய நடவடிக்கை எடுக்க நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாநகர நல அலுவலர் ஆகியோர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அதன்படி நாகர்கோவில் மாநகராட்சியில் திறந்தவெளியில் உணவு தயாரிக்கும் கடைகள் குறித்து சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் மூலம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது, நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் உணவு தயாரித்தல் , உணவு விற்பனை செய்யும் கடைகள் தங்களின் உணவு கூடம் அமைப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் வைத்து மார்ச் 11 ம் தேதி அன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளதால் தவறாது கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory