» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவில் நகரில் பெய்த கனமழையால் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம்

வியாழன் 5, மார்ச் 2020 6:34:20 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இடி மின்னலுடன் பெய்த மழையால்.100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாகவே வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று பகல் 2.30 மணியளவில் வானில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்தது. இடி-மின்னலுடன் பெய்யத் தொடங்கிய மழை சிறிது நேரத்திலேயே கனமழையாக மாறியது.மாலை 3.30 மணி வரை ஒரு மணி நேரம் இந்த மழை நீடித்ததால் நாகர்கோவில் நகரமே ஸ்தம்பிக்கும் நிலைக்கு உள்ளானது. இந்த மழை காரணமாக நாகர்கோவில் நகரின் முக்கிய சாலைகளில் வெள்ளம்போல மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் சாலைகளில் சென்ற வாகனங்கள் மழை வெள்ளத்தில் தத்தளித்தன. பல வாகனங்கள் மழை நீரில் சிக்கி செல்ல முடியா மல் ஆங்காங்கே நின்றதால் நகரின் பல இடங்களில் போக்குவரத்தும் ஸ்தம் பித்தது.மாலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரிகள் முடிந்து மாணவ-மாணவிகள் வீடு திரும்ப தயாராகி கொண்டிருந்தனர். கனமழை யால் அவர்கள் பள்ளி, கல்லூரிகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பிறகு மழை நின்றாலும் மழை வெள்ளம் வடிவதற்கு நீண்ட நேரம் ஆனதால் பெரும் சிரமத்துடனேயே மாணவ- மாணவிகள் வீடு திரும்பினர்.நாகர்கோவில் நகரையே புரட்டிப் போட்ட மழை 1 மணி நேரத்தில் ஓய்ந்தாலும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப சில மணி நேரங்கள் ஆனது.

நகரில் பல பகுதிகளில் உள்ள கழிவு நீர் கால்வாய் களில் அடைப்பு ஏற்பட்டதால் ஒரு மணி நேர மழைக்கே நாகர்கோவில் நகரம் தாக்குப்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. நகரின்பல பகுதியில் உள்ள சாலைகள் இன்று சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து சென்ற பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

அதேபோல கொட்டாரம், மயிலாடி, மண்டைக்காடு, ஆணைக்கிடங்கு, திற்பரப்பு, ஆரல்வாய்மொழி போன்ற பகுதிகளிலும் கனமழை பெய்தது. பூதப்பாண்டி, சுசீந்திரம், செண்பகராமன்புதூர் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் நெல் அறுவடை பணி பாதிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory