» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த வாலிபர் கைது

வியாழன் 5, மார்ச் 2020 5:22:50 PM (IST)

சுசீந்திரம் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே என்.ஜி.ஓ. காலனியில் டாஸ்மாக் உள்ளது.இந்த கடை ஊழியர்கள் கடந்த 27-ந்தேதி டாஸ்மாக் கடையை பூட்டி விட்டு சென்றனர். மறுநாள் வந்தபோது கடையின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு டாஸ்மாக் கடையில் இருந்த 29 மதுபான பாட்டில்கள், 24 பீர் பாட்டில்கள் திருடப்பட்டிருந்தது.

இது குறித்து சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தெங்கம்புதூர் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தாராம்.

பின்னர் டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர், ராமநாதபுரம்  இந்திரா நகரைச் சேர்ந்த மகேஷ் (வயது 33) என்பது தெரிய வந்துள்ளது. இவர், தற்போது நாகர்கோவில் கீழ சரக்கல் விளை பகுதியில் வசித்து வருவதாகவும் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட மகேஷ்வரன் மீது ஏற்கனவே குமரிமாவட்டத்தில் திருட்டு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory