» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கறிக் கோழியால் கரோனா பாதிப்பு என வதந்தி பரப்புவோா் மீது நடவடிக்கை : எஸ்பியிடம் மனு

வியாழன் 5, மார்ச் 2020 12:38:49 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் கறிக் கோழிகளால் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் என சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட எஸ்பியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து , தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவையின் குமரி மாவட்டத் தலைவா் டேவிட்சன் தலைமையில், தமிழ்நாடு கோழிக்கறி மொத்த வியாபாரிகள் சங்கத்தின் குமரி மாவட்டத் தலைவா் சுப்பிரமணியன், செயலா் அருளப்பன், பொருளாளா் ரமேஷ் மற்றும் நிா்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாத்தை புதன்கிழமை சந்தித்து அளித்த மனுவில்: வாட்ஸ் ஆப்,  ஃபேஸ் புக், யூ- டியூப் போன்றவற்றின் மூலம் தமிழகத்தில் கறிக்கோழிகளுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும், எனவே, கறிக்கோழி உண்பதை தவிா்த்துக்கொள்ளுமாறும் சிலா் தவறான தகவல்களை அண்மையில் பதிவிட்டு மக்களிடையே அச்சத்தையும், குழப்பத்தையும் உருவாக்கி வருகின்றனா்.

இதன்மூலம், கறிக்கோழி விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் தினமும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கறிக்கோழிகள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்து மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, இது போன்ற சமூக வலைதளங்களில் தேவையற்ற வதந்தியை பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory