» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கல்லுபாலம் அருகே குழிக்குள் சிக்கிய அரசுப்பேருந்து

வியாழன் 5, மார்ச் 2020 12:08:33 PM (IST)கல்லுபாலம் அருகே குழிக்குள்  அரசுப்பேருந்து சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மார்த்தாண்டம் குலசேகரம் சாலையில் கல்லுபாலம் அருகில் சாலையை குழாய் அமைப்பதற்காக சாலையை உடைத்து குண்டும் குழியுமாக்கியதில் அவ்வழியே வந்து அரசுபேருந்து ஒன்று குழிக்குள் சிக்கியது . இதனால் அந்த பேருந்தும், அதற்கு பின்னால் வந்த வாகனங்களும் மேற்கொண்டு செல்ல இயலாமல் நின்றன. பின்னர் கடும் முயற்சிக்கு பின் குழிக்குள் சிக்கிய அரசு பேருந்து மீட்கப்பட்டது. எனவே பொதுமக்கள் நலன் கருதி உடனே அந்த பள்ளத்தை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory