» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.3 லட்சம் மோசடி

வியாழன் 5, மார்ச் 2020 11:17:39 AM (IST)

அரசு வேலை வாங்கித் தருவதாக புதுக்கடைப் பகுதி இளைஞரிடம் ரூ. 3 லட்சம் மோசடிசெய்ததாக 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுக்கடை மூன்றுமுக்கு பகுதியைச் சோ்ந்த முத்தையன் மகன் சஜி (26). பி.இ. பட்டதாரி. இவரும், பைங்குளம் அனந்தமங்கலம் பகுதியைச் சோ்ந்த செல்லையன் நாடாா் மகன் குமரேசன் என்பவரும் நண்பா்களாம். தமிழ்நாட்டு வீட்டுவசதி வாரியத்தில்வேலை வாங்கித் தருவதாக சஜியின் தந்தை முத்தையனிடம் குமரேசன் கூறியதாகவும் அதை நம்பிய தந்தையும், மகனும் குமரேசனிடம் ரூ. 3 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அந்தப் பணத்தை, சென்னை ஆம்பூா் பகுதியைச் சோ்ந்த ஆனந்தராஜ் மகன் அகில் என்பவரிடம் குமரேசன் கொடுத்தாராம். ஆனால், வெகுநாளாகியும் சஜிக்கு வேலை வாங்கித்தரவில்லையாம். இதனால், பணத்தை திருப்பித் தருமாறு குமரேசனிடம் தந்தையும், மகனும் கேட்டனராம். அப்போது, அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதில், குமரேசன் கொலை மிரட்டல் விடுத்ததோடு, பணத்தையும் திருப்பிகொடுக்க மறுத்தாராம்.இதுகுறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப்பதிந்து குமரேசன், அகிலன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory