» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கடைகளுக்கு வெளியே உணவு தயாரிக்க தடை : 160 கடைகளுக்கு மாநகராட்சி நோட்டீஸ்

புதன் 4, மார்ச் 2020 7:45:51 PM (IST)

நாகர்கோவிலில் கடைகளுக்கு வெளியே உணவு தயாரிக்க தடை விதிக்க மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக 160 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

தற்போதைய நவீன கால கட்டத்தில் உணவகங்களில் கடைக்கு வெளியே உணவு தயாரிக்கும் முறை நடைபெற்று வருகிறது. சாலையின் ஓரத்தில் இருந்த கடைகள் இருப்பதால் உணவு தயாரிக்கும் போது பலத்த காற்று வீசும் போதும், வாகனங்கள் செல்லும் போதும் சாலையில் உள்ள தூசி, புகை ஆகியவை புரோட்டா, சிக்கன் எண்ணெய் தோசைக்கல்லில் படர்கிறது. இதனால் பெருமளவு சுகாதார கேடு ஏற்பட்டு இந்த உணவு சாப்பிடு வோருக்கும் உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. இது ஒருபுறமிருக்க சிக்கன் போன்றவற்றை சமைக்கும் போது அதில் தூவப்படும் வற்றல் பொடி சாலையில் செல்வோர் கண்களில் பட்டு எரிச்சலை ஏற்படுத்துகின்றது. 

எனவே இதுபோன்ற சாலையோரங்களில் திறந்தவெளியில் சுகாதாரமற்ற முறையில் உணவுகளை தயாரிக்க தடை செய்ய நடவடிக்கை எடுக்க நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாநகர நல அலுவலர் ஆகியோர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அதன்படி நாகர்கோவில் மாநகராட்சியில் திறந்தவெளியில் உணவு தயாரிக்கும் கடைகள் குறித்து சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் மூலம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு 160 உணவகங்கள் இவ்வாறு செயல்படுவதாக தெரிய வந்துள்ளது இந்த உணவுகளுக்கு நோட்டீஸ் அனுப்பும்பணி இன்று முதல் தொடங்கியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory