» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்திற்கு 2 நாட்கள் உள்ளுர் விடுமுறை : ஆட்சியர் அறிவிப்பு

புதன் 4, மார்ச் 2020 6:32:04 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 2 நாட்கள் உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே,  தகவல் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை ஷேக் பீர் முகம்மது சாகிப் ஓலியுல்லாஹ் (ராலி) ஆண்டு விழாவினை முன்னிட்டு மார்ச் 9 ம் தேதி (திங்கள்) மற்றும்  மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில் மாசிக் கொடை விழாவினை முன்னிட்டு 10.03.2020 (செவ்வாய்) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநிலஅரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது. மார்ச் 9 ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள உள்ளுர் விடுமுறைக்கு ஈடாக 2020 மே மாதத்தில்  இரண்டாவது சனிக்கிழமை (09.05.2020) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநிலஅரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலைநாளாக இருக்கும்.

10 ம் தேதி அன்று அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2020 ஜூன் மாதத்தில்  இரண்டாவது சனிக்கிழமை (13.06.2020) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநிலஅரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும். 9 மற்றும் 10 ம் தேதி கன்னியாகுமரிமாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு,தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என கன்னியாகுமரி மாவட்டஆட்சியர் பிரசாந்த்வடநேரே உத்தரவிட்டுள்ளார். அரசுப் பள்ளித்துறை சார்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசு தேர்வுகளுக்கு எவ்வித இடையூறுமின்றிகல்விநிறுவனங்கள் தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory