» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவில் பகுதிகளில் பெய்த திடீர் மழை : வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

புதன் 4, மார்ச் 2020 5:47:09 PM (IST)நாகர்கோவில் பகுதிகளில் பெய்த திடீர் மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், மார்த்தாண்டம், தக்கலை உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளில் கோடையை மிஞ்சும் அளவு கடுமையான வெயில் அடித்து வந்தது. இதனால் பகலில் வெளியே செல்லவே பொதுமக்கள் அஞ்சும் நிலை இருந்தது. இந்நிலையில் இன்று மதியம் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டு நாகர்கோவிலில் வடசேரி, ராஜாக்கமங்கலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றரை மணி நேரமாக பெய்த மழையால் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் ஒழுகினசேரி அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குள்ளும் மழை நீர் புகுந்ததால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory