» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறும் தேதி,இடம் : கன்னியாகுமரி ஆட்சியர் அறிவிப்பு

புதன் 4, மார்ச் 2020 1:26:23 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 6 ம் தேதி அம்மா திட்டம் சிறப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்டுள்ள அம்மா திட்டத்தின் ஐந்தாம் கட்ட சிறப்பு முகாம் 06.03.2020 வெள்ளிக்கிழமை அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு வட்டங்களில் கீழ்கண்டவாறு நடைபெறவுள்ளது. அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் மதுசூதனபுரம் தெற்கு வருவாய் கிராமத்திற்கு மட்டும், பள்ளம், புனித ததேயுஸ் உயர்நிலைப் பள்ளியில் வைத்தும்,தோவாளை வட்டத்தில் அழகியபாண்டிபுரம் வருவாய் கிராமத்திற்கு மட்டும், அழகியபாண்டி அரசு தொடக்க பள்ளியில் வைத்தும், கல்குளம் வட்டத்தில்; திங்கள்நகர் வருவாய் கிராமத்திற்கு மட்டும்,மாங்குழி அரசு நடுநிலை பள்ளியில் வைத்தும், திருவட்டார் வட்டத்தில் பேச்சிப்பாறை வருவாய் கிராமத்திற்கு மட்டும், பேச்சிப்பாறை கிராம ஊராட்சி அலுவலகத்தில் வைத்தும்,விளவங்கோடு வட்டத்தில் களியல் வருவாய் கிராமத்திற்குமட்டும்,களியல் செயின்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளியில் வைத்தும்,கிள்ளியூர் வட்டத்தில் கொல்லங்கோடு எம் வருவாய் கிராமத்திற்குமட்டும், கொல்லங்கோடு, அரசுமேல்நிலைப் பள்ளியில்  வைத்து காலை 10 மணியளவில்  நடைபெறவுள்ளது.

இந்த அம்மா திட்டம் ஐந்தாம் கட்ட சிறப்பு முகாமில் இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்டசமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டாமாறுதல், உழவர் பாதுகாப்பு அட்டை,பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், குடும்பஅட்டை,வருவாய் வட்டாட்சியர் அதிகாரத்திற் குட்பட்ட நிலதாவாக்கள், குடிநீர் மற்றும் சாலை வசதிபோன்ற பொதுவான மனுக்களை பொதுமக்கள் அளித்துதீர்வு காணலாம் எனவும் கன்னியாகுமரி மாவட்டஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory