» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அகஸ்தீஸ்வரம் அம்மன் கோவிலில் கொள்ளை முயற்சி

புதன் 4, மார்ச் 2020 12:21:11 PM (IST)

அகஸ்தீஸ்வரம் தேவி முத்தாரம்மன் கோவிலில் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் பிரசித்திபெற்ற தேவி முத்தாரம்மன் கோவில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோவிலில் தினசரி காலை, இரவு நேரங்களில் பூஜைகள் நடப்பது வழக்கம். இதனால் இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமிதரிசனம் செய்து விட்டு செல்வார்கள். மேலும் இந்த கோவிலுக்கு சொந்தமாக நகைகளும் உள்ளது. பாதுகாப்பு கருதி இந்த நகைகளை வங்கி லாக்கரில் வைத்து உள்ளனர்.

நகையை கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் இந்த கோவிலில் கொள்ளை முயற்சி நடந்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.காலை வழக்கமான பூஜைகள் நடத்துவதற்காக பூசாரி பாபு என்பவர் இந்த கோவிலுக்கு வந்தார். கோவில் கதவை திறந்து பூஜை செய்வதற்காக கருவறைக்கு சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு உள்ள சிறிய ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் கருவறையின் அருகே ஒரு கம்பும் கிடந்தது. நள்ளிரவில் இந்த கோவிலில் கொள்ளையடிப்பதற்காக மர்மநபர்கள் இங்கு வந்துள்ளனர். 

ஆனால் சாமிக்கு நகை எதுவும் அணிவிக்கப்படாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதும் தெரிய வந்தது.இந்த தகவல் பரவியதும் அந்த கோவிலில் பக்தர்கள் திரண்டு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கோவிலில் நடந்த கொள்ளை முயற்சி பற்றி தென்தாமரைகுளம் காவல்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. பாஸ்கரன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது இந்த கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட தங்க நெக்லஸ் பற்றிய வாட்ஸ்-அப் தகவல் மூலம் கொள்ளையர்கள் இங்கு கைவரிசை காட்ட முயன்றது தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory